Wednesday, November 4, 2015

சுவாசகோச முத்திரை

சுவாசகோச முத்திரை

இதன் பலன் - ஆஸ்துமா குணமாகும்.


முதல் நிலை-செய்முறை-இருகை பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நெஞ்சுக்குமுன் வைத்து இருகை நடு விரல்களை உட்பக்கமாக மடித்து அதன் நகக்கண்கள் ஒன்றை ஒன்று தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும் 

சைனஸ் பிரச்சனையை குணமாக்கும் மகாஷீர்ஸ் முத்திரை

சைனஸ் பிரச்சனையை குணமாக்கும் மகாஷீர்ஸ் முத்திரை

செய்முறை: 

முதலில் விரிப்பில் அமர்ந்து மோதிர விரலை மடித்து பெருவிரலின் அடிப்பாகத்தைத் தொட வேண்டும். பெருவிரலின் நுனிப்பகுதியால் ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியையும் நடுவிரலின் நுனிப்பகுதியையும் மெதுவாக தொட வேண்டும். சுண்டுவிரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையை 30 நிமிடம் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த முத்திரையை செய்யலாம். 

பயன்கள்: 

இந்த முத்திரை செய்வதால் சைனஸ் பிரச்சனை குறையும். தலை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது இந்த முத்திரை.

தைராய்டு பிரச்சினை தீர்க்கும் சூர்ய முத்திரை

தைராய்டு பிரச்சினை தீர்க்கும் சூர்ய முத்திரை
பலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.

செய்முறை:

இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் 

காய்ச்சலை குணமாக்கும் பங்கஜ முத்திரை

காய்ச்சலை குணமாக்கும் பங்கஜ முத்திரை

இதன் பலன்-காய்ச்சல் குணமாகும். உடல் சூடு தணியும்

செய்முறை-இரு கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்து குவித்து கட்டை மற்றும் சுண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறும் மற்ற விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை மூன்றரை நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்

டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை

டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை

இம்முத்திரை வயிற்றுக்கு நேராகச் செய்யும்போது மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படும், நெஞ்சிற்கு நேராக செய்யும் போது அனாகதம், விசுத்தி சக்கரங்களும்,நெற்றிக்கு நேராகச் செய்யும்போது ஆக்ஞா சக்கரமும், 

தலைக்கு மேல் வைத்து செய்யும் போது சகஸ்ரார சக்கரமும் தூண்டப்பட்டு, பல்வேறு விதமான பலன்களைத் தரும். கோபம் குறையும், டென்ஷன் நீங்கி, மன அமைதி ஏற்படும். தற்கொலை செய்யும் எண்ணம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல நினைவாற்றல் ஏற்படும், காக்காய் வலிப்பு, சளியால் ஏற்படும் தலைவலி, பல்வலி நீங்கும். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த முத்திரை இது. 

செய்முறை : நடுவிரல், மோதிர விரலை மடக்கி, கட்டை விரலை அதன் முதல் ரேகையில் படும்படி வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கும்படி வைக்கவும். 

சமமான துடிப்பு முத்திரை

சமமான துடிப்பு முத்திரை

இதன் பலன்கள்- சிந்தனை தெளிவடையும், ஞாபக சக்தி ஏற்படும்

முதல்நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும்.

மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். 

மாதவிடாய் வலியை போக்கும் மகா சக்தி முத்திரை

மாதவிடாய் வலியை போக்கும் மகா சக்தி முத்திரை

முக்கியமான முத்திரை இந்த மகா சக்தி முத்திரை. பெயரிலேயே இதன் முழுப் பலனும் உள்ளது. மணமான தம்பதியர் தங்கள் நல்லுறவு சரிவர அமையவும், பிறப்புறுப்புக்கள் துடிப்புடன் இயங்கவும், உச்சகட்ட இன்பத்தினை அனுபவிக்கவும், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் தீரவும், மாதவிடாய் சமயம் ஏற்படும் வலிகளைத் தீர்க்கவும் இந்த முத்திரை பெரிதும் பயன்படும். 

இம்முத்திரையைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும். கட்டைவிரலை சுண்டுவிரலோடு இணைக்கவும். அப்படியே இரண்டு கைகளின் நுனியையும் இணைத்து, பின் மெதுவாக இரண்டு கைகளின் மோதிரவிரல் நுனியையும் இணைக்கவும். மற்ற விரல்கள் விரிந்து நேராக நீட்டிய படி இருக்க வேண்டும். இந்நிலையிலேயே கைகளை அடிவயிற்றுக்கு நேராக வைத்து முத்திரையை செய்யவும். 15 நிமிடம் பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் போல் பிராண முத்திரையை இறுதியில் செய்யத் தவறக் கூடாது. 

குறிப்பு: கர்ப்பிணிகள் கட்டாயம் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.

சிந்தனையை தெளிவடைய செய்யும் நாக முத்திரை

சிந்தனையை தெளிவடைய செய்யும் நாக முத்திரை

இதன் பலன்கள்:

சிந்தனை தெளிவு அடையும். பிரச்சனைகள், சிக்கல்கள் தீர்வு காணும்.

செய்முறை:

இடது உள்ளங்கை கீழ் வலது உள்ளங்கை பாதம் பார்த்தவண்ணம் வைத்து வலது கட்டை விரலால் இடது உள்ளங்கையை லேசாக அழுத்தவும்.

இடது கட்டை விரல் வலது கட்டை விரல் மீது இருக்க வேண்டும். இடதுகையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை மூன்றரை நிமிடம் செய்யவும் 

கழுத்துவலி குறைக்கும் அனுசாசன் முத்திரை

கழுத்துவலி குறைக்கும் அனுசாசன் முத்திரை

மருத்துவ பலன்கள்

கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும்.

செய்முறை:

ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3.5 நிமிடம் செய்யவும். 

மாதவிடாய் கோளாறுகள் நீக்கும் சக்தி முத்திரை

மாதவிடாய் கோளாறுகள் நீக்கும் சக்தி முத்திரை

இதன் பலன்கள் உறக்கம் விரைவில் வரும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

செய்முறை:

தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து ஆள்காட்டி விரல், நடு விரல்களால் மூடியபடி கட்டை விரலில் லேசன அழுத்தம் கொடுக்கவும்.

இடது கைவிரல்கள் வலது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடது கை சுண்டு விரல், மோதிர விரல் இரண்டையும் நேராக நீட்டி விரல்களின் நுனிகள் வலது கையின் விரல் நுனிகளைத் தொடுமாறு செய்யவும். 

இந்நிலையில் கைகளை அப்படியே அடிவயிற்றின் அருகே வைத்து மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடவும்.

இரவு படுக்கையில் 3.5 நிமிடம் செய்யவும் 

சிந்தனை தெளிவடைய செய்யும் ஞான சின் முத்திரை

சிந்தனை தெளிவடைய செய்யும் ஞான சின் முத்திரை

இதன் பலன்கள்:

இது தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்படும்.

செய்முறை:

இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.

தினமும் காலை, மாலை மூன்றரை நிமிடம் செய்யவும் 

வயதானவர்களுக்கு பலன் தரும் பிருத்வி முத்திரை

வயதானவர்களுக்கு பலன் தரும் பிருத்வி முத்திரை

இதன் பலன்கள்:

வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.

செய்முறை-இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை மூன்றரை நிமிடம் செய்யவும். 

ஆசனவாய் தசையை வலுவடைய செய்யும் அஸ்வினி முத்திரை

ஆசனவாய் தசையை வலுவடைய செய்யும் அஸ்வினி முத்திரை

அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க வழி என்ன என்று புலம்புபவர்களுக்கு இதை விட சிறந்த வழி வேறு இல்லை. 

உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசன வாயில்(சுருங்கும் இடத்தில) வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுகிறது. இந்த முத்திரை செய்வதால் மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் தீரும். ஆசனவாய்த் தசையும் வலுவடையும். பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். 

செய்முறை : விரிப்பில் தியானம் செய்வது போல் அல்லது பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு குதம் வெளியேறும் பகுதியை மெதுவாகச் சுருக்கி இழுத்துப் பிடிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்.

கழிவுநீக்க முத்திரை

கழிவுநீக்க முத்திரை

கட்டைவிரலின் நுனிப்பகுதியால் மோதிர விரலின் கீழ் அதாவது மூன்றாவது ரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லிய அழுத்தம் போதுமானது. சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் இந்தநிலையில் சுவாசத்தை சாதாரணமாக நிலையில் வைத்து அதை கவனித்து வரவேண்டும். ஒரு 20 நிமிடங்கள் செய்யும் போது உடலின் கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும்.

அப்போது சிறுநீர் அதிகம் போவது, அதில் வாடை வீசுவது, மலம் அதிகவாடையுடன் அடிக்கடி போவது, கறுத்து மலம் வெளியேறுவது. வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடை வீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம். பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.

Tuesday, November 3, 2015

வாயு முத்திரை


சித்தா, வர்மக் கலை போன்ற நம்முடைய பாரம்பரிய மருத்துவங்களில் கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் வானத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்களையும் சமன் செய்வதற்கு முத்திரைகள் உதவுகின்றன.
 விரல்களின் நுனியில் பல்வேறு நரம்புகள் இணைந்திருக்கின்றன. சில நிமிடங்களுக்கு அவற்றை மென்மையாக அழுத்துவதன் மூலம், நம் உடலில் உள்ள பிரச்னை
களை சரிசெய்ய முடியும். இதுவே முத்திரைகள்.
சளி, இருமல், சுவாசப் பிரச்னை, தலைவலி, வயிற்று வலி, அஜீரணம் போன்ற சின்னச்சின்ன உடல்நலப் பிரச்னைகளுக்கு, மருந்துகள் இல்லாத சிகிச்சைமுறைகளை பற்றி இனி, ஒவ்வொரு இதழிலும் நாம் பார்க்கலாம்.

வாயு முத்திரை
ஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் வாயு அதிகமாகச் சேரும். மேலும், நம் இந்திய உணவுகள் வாயுவை உண்டாக்கக்கூடியவை. அதனால், மூட்டு வாதம், கை, கால் வலி, ஏப்பம், அஜீரணம், மலக்காற்று பிரிதல், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம், வயிற்றுப் புண், கை கால் பிடிப்பு, நெஞ்சு குத்தல், நெஞ்சு வலி  போன்றவை ஏற்படலாம். வாயு முத்திரை இவற்றைச் சரி செய்யும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும்.
 வாயுப் பிரச்னை இருப்பவர்கள், தொடர்ந்து செய்யலாம். சிலருக்குத் தொடர்ந்து 10 நாட்கள் செய்யும்போது, மூச்சுத் திணறல் ஏற்படலாம். அவர்களுக்கு விசீங் பிரச்னை இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இதை அவர்கள் செய்ய வேண்டாம்.
முத்திரைகளின் கட்டளைகள்
தரையில் விரிப்பை விரித்து, கண்கள் திறந்தவாறு கழுத்து மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்காரவும். முடியாதவர்கள், நாற்காலியில் அமரலாம். ஆனால், பாதங்கள் தரையில் முழுமையாகப் பட வேண்டும். கால்களைக் குறுக்காகவோ, கால் மேல் கால் போட்டு உட்காரவோ கூடாது. படுக்கையில் செய்வோர், தலையணை இல்லாமல் முத்திரைகளைச் செய்யலாம்.
விரல் நுனிகள் தொட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாலே போதும். மூச்சு இழுத்துப் பிடிக்க தேவை இல்லை. சாதாரணமாக இருக்கலாம்.
வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு. தவிர, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். பஸ், கார் போன்ற பயணங்களில்கூட முத்திரைகள் செய்யலாம்.
காலை 6, 7 மணிக்குள் செய்தால், முழு பலன் கிடைக்கும். ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) செய்யலாம். புதிதாகச் செய்பவர்களுக்கு, ஐந்து நிமிடங்களே போதுமானது. 

பிராண முத்திரை


சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
முத்திரைகள், கவனக்குவிப்பு, சுயசிகிச்சை, ஆற்றல் சேகரிப்பு மற்றும் சீரான ஆற்றல் விநியோகம் போன்றவற்றுக்காக செய்யப்படுகின்றன. முத்திரைகளை நிருத்த முத்திரை, சில்ப முத்திரை, யோக முத்திரை என மூன்று வகைகளாகச் சொல்வர். நிருத்த முத்திரை என்பது நடனஅடவுகளின் போது செய்பவை. கடவுள் சிற்பங்கள் உட்பட சிற்பங்களின் பாவங்களில் காணப்படுபவை சில்ப முத்திரை. யோக முத்திரைகள் என்பவை தியானத்தின்போதும் உடல்நலக் குறைவின்போதும் செய்பவை. யோக முத்திரையில் உள்ள சின் முத்திரையை தியானம் செய்யும்போது மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தியானம் செய்வதற்கு முன், எண்ண ஒட்டங்களைச் சீர்படுத்தவும் செய்யலாம். உடல் நலக் குறைபாடுகளுக்கு முத்திரைகள் செய்ய வேண்டுமென்றால், தியானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு முத்திரைகளும் அதன் தனித்துவத்துவப் பலன்களைக் கொண்டது.
பிராண முத்திரை செய்யும் முறை
சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
பிராண முத்திரையின் பலன்கள்:
சுண்டு விரல் - நீர், மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை.
இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். பிரச்னைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும். உடலுக்கு சக்தி கிடைப்பதால் சோர்வு, மந்தம், களைப்பு உடனடியாகச் சரியாகும். தீவிர முடி கொட்டுதல் பிரச்னை இருந்தாலும் சரியாகும். வளர்சிதை மாற்றத்தின் அளவு அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும். விந்தணுக்களின் வேகம் அதிகரிக்கும். நரம்புப் பிரச்னைகளால் ஏற்படும் வலிகள் குணமாகும்.
கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும்.  கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம். 
சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்னைகளும் சரியாகிவிடும்.
யார் செய்யக் கூடாது?
பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள் Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது. வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.

கழிவு நீக்க முத்திரை.


ண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
முத்திரைக்கான கட்டளைகள்
காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால்,  கழிவுகள்  எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.
புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.
மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
பலன்கள்:
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து  எளிதில் வெளிவரலாம். 
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.
புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.
மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.
நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.

நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை !


மது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.
எப்படிச் செய்வது?
கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.
கட்டளைகள்
தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.
மழைக் காலம், குளிர் காலங்களிலும், குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும்.
ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.
முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
பலன்கள்
உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும்.  இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.
அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள், வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது. கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துபோதல், கண் சோர்வு போன்றவை குணமாகும். உடலில் நீர்த்தன்மை குறைவதால், கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்துவர, கருவளையம் மறையும்.
சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும். பருத் தொல்லை நீங்கும். சரும நோய்கள் சரியாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும்.
வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும்.
எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாகம் (Polydypsia) பிரச்னை சரியாகும்.
நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு போன்றவை சரியாகும்.
வெள்ளைப்படுதல் பிரச்னை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி மட்டுப்படும்.
வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்னை குறையும். மனம் அமைதியாகி,  ஆழ்ந்த தூக்கம் வரும்.

அபான வாயு முத்திரை மூலம் குணமாக!


ந்தக் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, உடலைச் சுத்தம் செய்ய, நோன்பு இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேதி மருந்து எடுத்துக்கொள்வது எனச் சில நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தனர். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்ட காலத்திலேயே உடலைச் சுத்தம் செய்ய, குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை தேவையாக இருந்தது. ஆனால், இன்றைய ஃபாஸ்ட்ஃபுட் கலாசாரத்தில் உடலின் நச்சுக்களை அகற்ற எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்வதே இல்லை. மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும்.
உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.
எப்படிச் செய்வது?
கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
பலன்கள்
வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.  வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.
பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர, காலையில் மலம் கழிக்கும் பிரச்னை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.
முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.
சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற  பிரச்னையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.
மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகள் சரியாகும்.

கட்டளைகள்
 நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்களை ஊன்றியபடியோ, தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால், படுத்துக் கொண்டு செய்யக் கூடாது.
 காலை, மாலை இருவேளையும் 20-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
 
 சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்னை இருக்கும்போது செய்யக் கூடாது.
 கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம்.

சம ஆற்றல் தரும் சமான முத்திரை


மது உடலில் பஞ்சபூதங்களின் ஆற்றல்கள் உள்ளன. விரல்கள் இதன் சக்தி மையங்களாக செயல்படுகின்றன. கட்டை விரல் - அக்னி, ஆள்காட்டி விரல் - வாயு, நடு விரல் - ஆகாயம், மோதிர விரல் - நிலம், சுண்டு விரல் - நீர். இந்த ஐம்பூதங்களின் ஆற்றல் உடலில் சமஅளவில் இயங்கும்போது, உடலிலும் மனதிலும் சமநிலை ஏற்படுகிறது. இந்த சமவிகிதத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, அது நோயாக உருவெடுக்கிறது.
பஞ்சபூதங்களில் மண் அதிகமானால், உடலின் எடை அதிகரித்து மந்தத்தன்மை ஏற்படும். இதுவே குறைந்தால், தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கும். நீர் அதிகமானால், கை, கால் மற்றும் முகத்தில் வீக்கம் வரும். இது குறைந்தால், சரும வறட்சி, தாகம், வயதான தோற்றம் ஏற்படும். நெருப்பு அதிகமானால், உடல் வெப்பம் அதிகரிக்கும். குறைந்தால், ஹார்மோன் குறைபாடுகள் உண்டாகும். வாயு மற்றும் ஆகாய பூதங்கள் அதிகமானாலும் குறைந்தாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் வரும். எனவேதான் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி, சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலையாவதால், உடலுக்கு அபரிமிதமான ஆற்றல் கிடைக்கிறது.
பலன்கள்
உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது.
அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக, மூளை சுறுசுறுப்படையும்.
பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர, தெம்பு கிடைக்கும்.
உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால், இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.
தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.
கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும்.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து, சுறுசுறுப்பாகத் தயாராக முடியும். தன்னம்பிக்கை, மன உறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும்.
தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால், ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.
நீச்சல், ஓட்டப்பந்தயம், பளுத் தூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் ஈடுபவர்கள், தினமும் செய்துவந்தால் மனம் உறுதியாகும். உடல் சோர்வு அடையாது.
வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும்.
எந்த முத்திரை நமக்குச் சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள், சமான முத்திரையை மட்டும் செய்தாலே போதும், நல்ல தீர்வு கிடைக்கும்.
எப்படிச் செய்வது?
ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவேண்டும்.
கட்டளைகள்
சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து,  பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்ய வேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது.
முத்திரை செய்யும்போது, உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
அனைவரும் செய்யலாம்.