Saturday, March 19, 2016

டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை

டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை

இம்முத்திரை வயிற்றுக்கு நேராகச் செய்யும்போது மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படும், நெஞ்சிற்கு நேராக செய்யும் போது அனாகதம், விசுத்தி சக்கரங்களும், நெற்றிக்கு நேராகச் செய்யும்போது ஆக்ஞா சக்கரமும், தலைக்கு மேல் வைத்து செய்யும் போது சகஸ்ரார சக்கரமும் தூண்டப்பட்டு, பல்வேறு விதமான பலன்களைத் தரும். கோபம் குறையும், டென்ஷன் நீங்கி, மன அமைதி ஏற்படும். 

தற்கொலை செய்யும் எண்ணம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல நினைவாற்றல் ஏற்படும், காக்காய் வலிப்பு, சளியால் ஏற்படும் தலைவலி, பல்வலி நீங்கும். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த முத்திரை இது.

செய்முறை : நடுவிரல், மோதிர விரலை மடக்கி, கட்டை விரலை அதன் முதல் ரேகையில் படும்படி வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கும்படி வைக்கவும்.

உடல் சோர்வை போக்கும் சமான முத்திரை

உடல் சோர்வை போக்கும் சமான முத்திரை

ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவேண்டும்.

சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து, பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்ய வேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது.

முத்திரை செய்யும்போது, உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும்.

ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.


பலன்கள்

அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக, மூளை சுறுசுறுப்படையும்.

பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர, தெம்பு கிடைக்கும்.

உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால், இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.

தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.

கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும்.

தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால், ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும் ருத்ர முத்திரை

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும் ருத்ர முத்திரை

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. 

செய்முறை 

கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.

நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் 

சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும். 

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.